© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 7ஆவது சட்டமன்றத் தேர்தல் சுமுகமாக நடைபெற்றது. சீன அரசவையின் செய்தித் தொடர்பு அலுவலம் 20ஆம் நாள், ‘ஒரே நாட்டில் இரண்டு அமைப்புமுறைகளில்’ ஹாங்காங்கின் ஜனநாயக வளர்ச்சி என்ற தலைப்பிலான வெள்ளையறிக்கையை வெளியிட்டது. இதில், ஹாங்காங் ஜனநாயகத்தின் வளர்ச்சி முன்னேற்றப்போக்கு விரிவாக மீட்டாய்வு செய்யப்பட்டுள்ளது. நடைமுறைகளின் அடிப்படையில் ஹாங்காங் ஜனநாயக அமைப்புமுறையை வளர்ப்பதை மத்திய அரசு ஆதரிப்பது தொடர்பான கோட்பாடுகளும் நிலைப்பாடுகளும் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளன. ஹாங்காங்கின் ஜனநாயகத்தைப் பேணிக்காத்து வளர்ப்பவர், அதன் ஜனநாயகத்தைச் சீர்குலைத்து தடுப்பவர் யார் ஆகிய 2 முக்கிய கேள்விகளுக்கு இந்த வெள்ளையறிக்கை தெளிவான பதில் அளித்தது.
‘ஒரே நாட்டில் 2 அமைப்புமுறைகள்’மற்றும் ஹாங்காங்கின் நடைமுறைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீன மத்திய அரசும் ஜனநாயக அமைப்புமுறையை உருவாக்கியுள்ளது. ஹாங்காங் நகரவாசிகள் பரந்த அளவிலான ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை அனுபவித்து கொள்வதற்கு இந்த அமைப்புமுறை காப்புறுதி அளித்துள்ளது. 13லட்சத்துக்கும் மேற்பட்ட ஹாங்காங் வாசிகள் முனைப்புடன் வாக்களித்து 90 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
உலகில் அனைத்து தரப்புகளுக்கும் தகுந்த ஒரே மாதிரியான ஜனநாயகம் இல்லை. தத்தமது நடைமுறைக்கு ஏற்ப பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய ஜனநாயகம், நல்ல ஜனநாயகம் தான். கடந்த 24 ஆண்டுகளில் நடைமுறைகளின் மூலம், மேற்கத்திய ஜனநாயகத்தையை கண்மூடித்தனமாக பின்பற்றுவது, ஹாங்காங்கிற்கு குழப்பத்தை ஏற்படுத்துவது உறுதி என்று மெய்பிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் சொந்தமான பாதையில் நடந்து சென்று சொந்தமான ஜனநாயகத்தை உருவாக்க வேண்டியது அவசியம்.