ஹாங்காங் ஜனநாயகத்தைச் சீர்குலைப்பவர் யார்
2021-12-21 10:09:09

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உருவாக்கிய 5 கண்கள் கூட்டணி அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் 20ஆம் நாள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஜனநாயகம் மற்றும் மனித உரிமை என்ற பெயரில், சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 7ஆவது சட்டமியற்றல் குழு தேர்தல் பற்றித் திரித்துப் பேசியது நியாயமற்றது. மேலும் சீன-பிரிட்டன் கூட்டறிக்கையை சீனா பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்று அவை கோருவதும் கேலியாக இருக்கிறது. பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவுக்குத் திருப்பிக் கொடுப்பது பற்றிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, சீன-பிரிட்டன் கூட்டறிக்கை உருவாக்கப்பட்டது. சீனாவுடன் இணைந்த பிறகு, ஹாங்காங்கில் தேர்தல் முறைமை உள்ளிட்ட அரசியல் அமைப்பு முறையைச் செயல்படுத்துவது சீன-பிரிட்டன் கூட்டறிக்கை அல்ல. ஹாங்காங் சீனாவின் உரிமை பிரதேசங்களில் ஒன்று. ஹாங்காங்கின் தேர்தல் அமைப்பு முறை, சீன உள்விவகாரத்தைச் சேர்ந்தது. ஹாங்காங் சொந்த நிலைமைக்குப் பொருந்திய பாதையில் நடைபோட, சீன மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.