சின்ஜியாங்கை அரசியல் கருவியாகப் பயன்படுத்திச் சீனாவைத் தடுப்பதில் அமெரிக்கவின் சதி பலிக்காது
2021-12-22 20:21:30

அண்மையில், அமெரிக்கா சின்ஜியாங் மனித உரிமை விவகாரத்தைச் சாக்குபோக்காக கொண்டு சீனாவின்  4 அதிகாரிகளின் மீது சட்டவிரோத தடை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது குறித்து, வெளிநாட்டுத் தடைகள் எதிர்ப்புச் சட்டத்தின்படி, சீனா அமெரிக்காவுக்குப் பதிலடி நடவடிக்கை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலனை உறுதியாகப் பேணிக்காப்பதற்கும் பிற நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடாமை மற்றும் இறையாண்மையின் சமத்துவ கோட்பாட்டை உறுதியாகப் பேணிக்காப்பதற்கும் சீனாவின் பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளும் காரணமாகும். மேலாதிக்கவாதம் மற்றும் வல்லரசு அரசியலை எதிர்க்கும் தெளிந்த மனப்பான்மையையும் வெளிக்காட்டுகிறது.

சீன அதிகாரிகளின் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை முற்றிலும் பொய் தகவல்களின் அடிப்படையில் இருக்கும். சீனாவின் உள்விவகாரத்தில் அமெரிக்கா கடுமையாகத் தலையிடுவது சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டுக்குப் புறம்பானது. ஐ.நாவை மையமாக கொண்ட சர்வதேச முறைமைக்கும் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சீனா தடை விதிக்கப்பட்ட 4பேரும் அமெரிக்க சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையத்தைச் சேர்ந்தவர்கள். தவறான அரசியல் எண்ணத்துடன் சீனாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் இந்த ஆணையம், ஆண்டுதோறும் சீனாவின் மத கொள்கை மற்றும் நிலைமை பற்றி அவதூறு செய்யும் அறிக்கையை வெளியிட்டுச் சீன உள்விவகாரத்தில் தலையிட்டுள்ளது.

சின்ஜியாங் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு எப்போதும் உறுதியானது. அதாவது, எந்த வெளிப்புற சக்தியும் சின்ஜியாங்கின் விவகாரத்தில் தலையிடுவதை சீனா அனுமதிக்காது. சின்ஜியாங்கைப் பயன்படுத்தி சீனாவைத் தடுக்கும் சதி கண்டிப்பாகத் தோல்வியடையும்.