அப்பாவி மக்களைக் கொன்ற அமெரிக்காவுக்கு மனித உரிமை பற்றி பேச தகுநிலை இல்லை!
2021-12-23 21:08:54

அமெரிக்க படை போரில் அதிகமான அப்பாவி மக்களைக் கொன்றதை வெளிப்படுத்திய செய்தியாளர் அஸ்மாட் கானின் ஆய்வுக் கட்டுரை அண்மையில் நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் தொடர்ச்சியாக வெளியானது.

புள்ளிவிவரங்களின்படி, ஈராக் முதல் ஆப்கானிஸ்தான் வரை, சிரியா முதல் ஏமன் வரை, கடந்த 20ஆண்டுகளில் அமெரிக்கா நடத்தி 90ஆயிரத்துக்கும் மேலான வான் தாக்குதல்களில் குறைந்தது 48ஆயிரமான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அவர்களில் விவசாயிகள், குழந்தைகள் உள்ளனர் என்று கட்டுரையில் வெளிவந்தது. வான் தாக்குதல்களில் அதிக அப்பாவி மக்களின் உயிரிழப்பை ஏற்படுத்தாது என்ற அமெரிக்காவின் பொய் கூற்று இக்கட்டுரையில் முற்றிலும் வெளிப்படுத்தப்பட்டது.

அமெரிக்காவின் இந்த குற்றச் செயல் பயங்கரவாதத்துக்கு வித்தியாசம் இல்லை. அவர்கள் அமெரிக்காவை வெறுப்பதற்கான காரணமாகும் என்று சமூக ஊடகத்தில் அமெரிக்க இணையப் பயனாளிகள் பலர் அமெரிக்கப் படையின் வன்முறைச் செயல்களைக் குற்றஞ்சாட்டினர்.   

அமெரிக்கா, சில பகுதிகளில் ஜனநாயக வெளியேற்றத்தைச் செயல்படுத்தி உள்ளூரின் செழுமை வளர்ச்சியைக் கொண்டு வரவில்லை. அத்தோடு, புதிய மனித நேய சீற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்று வரலாற்று பதிவுகள் முழுமையாக நிரூபித்துள்ளது. மனித உரிமை பற்றி பேச அமெரிக்காவுக்கு தகுநிலை இல்லை.