அமெரிக்க சாதாரண கஷ்டமான கிறிஸ்துமஸுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?
2021-12-24 19:23:05

கிறிஸ்துமஸ் மரம் கூட 2021ஆம் ஆண்டு பொருளாதார குழப்பத்தின் பாதிப்பிலிருந்து தப்பி செல்ல முடியாது என்று வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க கிறிஸ்துமஸ் மர சங்கம் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, இவ்வாண்டு கிறிஸ்துமஸ் மரங்களின் விலை 10முதல் 30விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் பண வீணக்க விகிதம் 6.8விழுக்காட்டை எட்டியுள்ளது. கடந்த 39ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக உயரமான பதிவு இதுவாகும். உணவுப் பொருட்கள், எரியாற்றல், வாகனம், வாடகை வீட்டின் செலவு முதலியவற்றின் விலை பெரும் அளவில் உயர்ந்துள்ளது.

கரோனா பரவல் தடுப்புக்கான நிதியுதவி செலவிடப்பட்டதாலும், உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாலும், டிசம்பர் துவக்கத்தில் சுமார் 2கோடியே 10லட்சமான அமெரிக்க மக்களுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களைட மேற்கோள் காட்டி அறிவித்துள்ளது.  

ஆனால், பங்குச் சந்தையும் வீடுகளின் விலையும் அதிகரித்துள்ளன. அமெரிக்க பணக்காளர்களின் சொத்து அதிகரித்துள்ளது என்பது அபத்தமானது.

அமெரிக்கரைப் பொறுத்தவரை, உயர்ந்த விலைவாசி மட்டுமல்ல, மீண்டும் தீவிரமாகி வரும் கரோனா தடுப்பு நிலைமையும் கிறிஸ்துமஸ் சூழலைப் பாதித்துள்ளன.

அமெரிக்கர் எதிர்கொண்டுள்ள கிறிஸ்துமஸ் சிக்கல்,   விலைவாசி உயர்வு மற்றும் கரோனா பரவல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. ஆனால்,  தொற்று நோய் தடுப்பில் அமெரிக்க அரசியல்வாதிகளின் திறமையின்மை,  பொறுப்பற்ற நிதிக் கொள்கை ஆகியவை, இந்த சிக்கலை ஏற்படுத்தியதன் உண்மையான காரணங்கள் ஆகும்.  இந்த அரசியல்வாதிகள் அரசியல் நலன்களை சாதாரண மக்களின் நலனுக்கு மேலாக வைத்ததால் தவிர்க்க முடியாத விளைவு ஆகும்.