தனக்கு தானே தீங்குவிளைவிக்கும் அமெரிக்காவின் ஜனநாயக ஊன்றுதல்
2021-12-25 16:02:07

அமெரிக்கர்கள் தனது நாடு மலை சிகரத்திலுள்ள நகரம் எனவும், தாங்கள் கடவுளால் தெரிவு செய்யப்பட்டவர்கள் எனவும் நம்புகின்றனர். அமெரிக்காவின் பண்பாட்டு மரபணுவில் முரண்பாடு உள்ளது. ஒரு புறம், தன்னைச் சுதந்திரத்தின் உருவமாகவும், தனித்தன்மை வாய்ந்த அமெரிக்க எழுச்சியை தனது வெற்றிக்கான காரணமாகவும் அமெரிக்கா கருதுகிறது. மறு புறம், அமெரிக்க பாணி ஜனநாயகம் பொதுத்தன்மை வாய்ந்ததாகக் கருதி, சுதந்திரம் என்ற பெயரில், அதனை எங்கும் பதிய வைக்க முயன்று வருகிறது. அதிலிருந்து வேறுபடும் மற்ற நாடுகள் மற்றும் நாகரிகங்களின் சித்தாந்தம், மதிப்பு, வாழ்க்கை முறை முதலிவை அழிக்கப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறது.

வெளிநாடுகளில் அமெரிக்கா தனது ஜனநாயகத்தை பதிய வைக்கும் செயலில் தோல்விகள் அதிகம். வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் அமெரிக்கா இராணுவத் தலையீடு மற்றும் அரசியல் திருத்தம் செய்ததில் தோல்வியடைந்த சம்பவங்கள் மேலும் அதிகம்.

வெளிநாடுகளில் அமெரிக்காவின் ஜனநாயக ஊன்றுதல் தோல்வியடைந்தது மட்டுல்ல, உள்நாட்டிலும் அதன் விதிவிலக்குவாதம் மற்றும் அரசியல் வேதவியல், சுதந்திரவாதம் மற்றும் இடது சாரி பண்பாட்டுப் பிரிவின் அறைகூவல்களை எதிர்நோக்குகிறது. கடந்த சில ஆண்டுகளில் பல காரணிகளால், இத்தகைய அறைகூவல் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் உட்புற பண்பாடு மற்றும் நாகரிக மோதல் தொடர்கின்றன. இது, இன மோதல் மற்றும் வர்க்க முரண்பாட்டுடன் இணைந்துள்ளது. ஜனநாயக ஊன்றுதலால் கொண்டு வரும் பாதிப்புகளை அமெரிக்கா தனக்கு தானே ஏற்படுத்தி வருகிறது.