ஏமாற்றம் தரும் அமெரிக்கச் சட்டம்
2021-12-25 20:13:26

கூறப்படும் உய்கூர் கட்டாய உழைப்பு தடுப்பு மசோதாவை அமெரிக்க அரசு அங்கீகரித்துள்ளதது குறித்து சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரேதச அரசு செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தி, உண்மையைப் பயன்படுத்தி அமெரிக்காவின் ஏமாற்றுத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சர்வதேச உழைப்பு அமைப்பின் கட்டாய உழைப்பு பொது ஒப்பந்தத்தின் படி, சின்ஜியாங்கில் கட்டாய உழைப்பு ஏதும் இல்லை.

சீனாவின் சட்டத்தின் படி, சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்வேறு தேசிய இன மக்கள், சமநிலையில் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். அதனை சீனாவின் அரசியல் அமைப்புச் சட்டம், உழைப்புச் சட்டம், உழைப்பு ஒப்பந்தச் சட்டம் ஆகியவை  உறுதி செய்து பாதுகாக்கின்றன.

இதனால், சர்வதேச உடன்படிக்கையின்படியோ, சீனாவின் சட்டப்படியோ மற்றும் உண்மையாலுமோ என எதன் படியும், சின்ஜியாங்கில் கட்டாய உழைப்பு இல்லை. ஆனால் உள்ளது என அமெரிக்கா கூறுவது முற்றிலும் ஏமாற்று வேலை என்பது குறிப்பிடத்தக்கது.