பயங்கர நிகழ்வை ஏற்படுத்தும் அமெரிக்காவின் இணைய மேலாதிக்கவாதம்
2021-12-25 15:57:10

மற்ற நாடுகளை விட மேலும் பெரும் மேம்பாடுகளைப் பெறும் வகையில், அமெரிக்காவின் முந்தைய க்ளிண்டன் அரசு முதல் தற்போது வரை உலகளாவிய இணையப் போர் பற்றிய சூழ்ச்சியை உருவாக்கி, இணையத் தாக்குதல் தொடுத்து வருவதோடு, தனது ஒற்றுக் கேட்டல் அளவையும் மறைமுகமாக விரிவாக்கி, உலக இணையவெளியை பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் நிலையற்றத் தன்மை நிறைந்த பகுதியாக மாற்றி வருகிறது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, அமெரிக்காவின் 4 அரசுகள் அடுத்தடுத்து நெடுநோக்கு போட்டியை மையக் கருத்தாகக் கொண்டு, இணைய விதிகளை வகுக்கும் அதிகாரத்தையும், இணையவெளியில் நெடுநோக்கு மேம்பாடுகளையும் பெறும் விதம் செயல்பட்டு வருகின்றன. 2011ஆம் ஆண்டு முதல் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் இணைய பாதுகாப்பு பற்றிய 3 நெடுநோக்கு அறிக்கைகளை ஏற்றுக் கொண்டு, தனது இணையப் பாதுகாப்பு நெடுநோக்கு மாதிரியின் பரிணாமத்தை நிறைவேற்றியுள்ளது.

தேசியப் பாதுகாப்பை சாக்குபோக்காகக் கொண்ட அமெரிக்கா, இணையம் சார் உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேசியப் பாதுகாப்பு நிலையத்தின் ப்ரிஸ்ம் திட்டம் ஸ்னோடன் என்பவரால் வெளியிடப்பட்ட பின், தனது பெருமளவிலான ஒற்றுக்கேட்டல் திட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 122 வெளிநாட்டுத் தலைவர்கள் இத்தகைய ஒற்றுக்கேட்டல் திட்டத்துக்குள் அகப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் இணையத் தாக்குதல் திறன், அறிவியல் புனைகதையில் வரும் பயங்கர அம்சங்களை உண்மையாக மாற்றியுள்ளதோடு, இந்த பயங்கரத் தொழில் நுட்பத்தின் பரவலையும் ஏற்படுத்தியுள்ளது. சில கணினி வைரஸ்கள் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு நிலையத்தின் ஒரு மென்பொருளின் அடிப்படையில் திருத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன என்று பொதுவாகக் கருதப்படுகிறது.

இணையத்தைத் தடை செய்வது, குறிப்பிட்ட சில பொருட்களைப் புறக்கணிப்பது ஆகியவை மூலம் உண்மையான இணையப் பாதுகாப்பை நனவாக்காமல், மனிதகுலத்தின் எதிர்கால வளர்ச்சியுடன் முக்கியத் தொடர்புடைய இத்துறைக்குப் பாதிப்பை மட்டும் கொண்டு வரும்.