மனித உரிமைகளில் ‘பேரரசரின் புதிய ஆடைகள்’போலவே நடிக்கும் அமெரிக்கா
2021-12-28 16:27:58

மனித உரிமை விவகாரங்களை அமெரிக்கா தீவிரமாக அரசியலாக்கி வருகிறது. இது,  உலகின் மனித உரிமை வளர்ச்சிக்குப் பெரும் அச்சுறுத்தலையும் மிக மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. சீன மனித உரிமை ஆய்வு சங்கம் 27ஆம் நாள் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவற்றைச் சுட்டிக்காட்டியது.

மனித உரிமை என்பது, அமெரிக்கா மேலாதிக்கம் செலுத்தும் விதமாக  பயன்படுத்தும் முகமூடியாகும். அமெரிக்கா பிற தரப்புகளை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தும் அரசியல் கருவியாகவும்  என்று அதிக உண்மைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் இச்செயல், மனித உரிமைகளின் கோட்பாடுகளை கறைபடுத்தியுள்ளது. உலகின் மனித உரிமை நிர்வாகத்துக்குப் பெரும் சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது.  மனித உரிமை மீறல் போன்ற அமெரிக்காவின் செயல்கள் அதிகமாக வெளிவந்து விமர்சிக்கப்பட்டதுடன்,  அமெரிக்க அரசியல்வாதிகள் மனித உரிமை என்ற முழக்கத்தை எழுப்பி,  தன்னை அழகுப்படுத்த முயல்கின்றனர்.

மனித உரிமைகளை அரசியலாக்குவதைத் தடுப்பது உலகின் மனித உரிமை லட்சயத்தின் சீரான வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாகுமென மக்கள் நாளுக்கு நாள் ஆழமாக உணர்ந்துள்ளனர்.

‘பேரரசரின் புதிய ஆடைகள்” கழற்றப்பட்ட பிறகு, அமெரிக்க அரசியல்வாதிகள் மனித உரிமகளை அரசியலாக்கும் மோசமான செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.