ஆப்பிரிக்காவுக்கு காலாவதியான தடுப்பூசி வழங்கும் மேலை நாடுகள்
2021-12-28 18:59:41

நைஜீரியா அக்டோபரில் ஐரோப்பாவிலிருந்து அஸ்ட்ராஸெனிகா தடுப்பூசிகளைப் பெற்றது. ஆனால் அவற்றில் பாதி அளவு தடுப்பூசிகள் நவம்பரில் காலாவதியாகக் கூடியவை. இத்தடுப்பூசியின் பாதுகாப்பு பற்றிய பொது மக்களின் கவலையை நீக்கும் வகையில், நைஜீரியா அரசு கடந்த வாரம் காலாவதியான இந்தத் தடுப்பூசிகளை அழிக்க நேரிட்டது.

ஆப்பிரிக்காவில் மேலை நாடுகளின் காலாவதியான தடுப்பூசிகளைப் பெறுவதற்கு நைஜீரியா தனியொரு எடுத்துக்காட்டு அல்ல. மேலை நாடுகளில் தடுப்பூசி தேசியவாதம் தொடர்ந்து நிலவுவதை இது வெளிப்படுத்தியுள்ளது. தடுப்பூசி இடைவெளி, உலகளவில் தொற்று நோய் தடுப்புக்கு மிகப் பெரிய தடையாகும்.

நவம்பர் இறுதிவரை, ஆப்பிரிக்காவுக்கு சீனா 18 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. ஆப்பிரிக்காவுக்குத் தேவையானது உண்மையான அவசர உதவி தானே தவிர, காலாவதியான தடுப்பூசி வழங்கும் போலியான நன்கொடை அல்ல. மேலை நாடுகள் பொறுப்புடன் செயல்பட்டு, சீனாவைப் போல் தரமான தடுப்பூசியை வழங்கி, உலக தொற்று நோய் தடுப்புக்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.