© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
அமெரிக்க வெள்ளை இன இளைஞர் பாட்ரிக் வூட் க்ரூஸியஸ் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் நாள் அந்நாட்டின் தீவிர வலது சிந்தனை இணைய மன்றம் ஒன்றில், புறக்கணிக்க முடியாத உண்மை என்ற கட்டுரையைப் பதிவேற்றி, நியூசிலாந்தின் மசூதி ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ஆதரவையும், சிறுபான்மை இனத்தவர்கள் வெள்ளையர்களின் பண்பாடு மற்றும் இனத்தை மாற்றுவதற்கு மனநிறைவின்மையையும் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், அவர் துப்பாக்கி கொண்டு டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஒரு பேரங்காடியில் துப்பாக்கி சூடு நடத்தி 23 பேரைக் கொன்றார். அவ்வாண்டில் மிகக் கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவமாகவும், கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் தீவிர வலது சிந்தனை வாதக் குற்றங்கள் பலவற்றில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.
உள்நாட்டுப் பயங்கரவாதத் தாக்குதல், குறிப்பாக தீவிர வலது சிந்தனை வாத எழுச்சி, தற்போது அமெரிக்காவுக்குப் மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். அமெரிக்கச் சமூகத்தில் தீவிர வலது சிந்தனை வாத சக்தியின் எழுச்சி, வெள்ளையர்களின் தோல்வி உணர்வு மற்றும் அடையாள நெருக்கடியால் ஏற்பட்டது. இத்தகைய மனநிலை, அந்நாட்டின் பொருளாதார சமூகம் மற்றும் சமூகக் கட்டமைப்பின் மாற்றத்துடனும், அதன் முடிவற்ற பயங்கரவாத எதிர்ப்புப் போர்களுடனும் தொடர்புடையது.
இத்தகைய போர்களில் பயன் பெற்ற தரப்பு, அமெரிக்காவின் இராணுவ- தொழில்துறை மட்டும். இதன் விளைவாக, அந்நாட்டின் சிந்தனை, அரசியல் மற்றும் பண்பாடு ஆகியவை, இராணுவ மயமாக்கல் சூழநிலையில் உள்ளன. தீவிர வலது சிந்தனை பயங்கரவாதத்தின் விரைவான வளர்ச்சிக்கு இது சிறந்த சூழலை உருவாக்கியுள்ளது.