ஜப்பானின் அணு மின் நிலையக் கழிவுநீர் வெளியேற்றத் திட்டத்துக்கு எதிர்ப்பு
2021-12-29 20:22:13

2022ஆம் ஆண்டு விரைவில் பிறக்க உள்ளது. முழு உலகமும் மேலும் அருமையான எதிர்காலத்தை எதிர்பார்த்து வருகிறது. ஆனால், ஃபுகுஷிமா அணு மின் நிலையத்திலிருந்து கழிவுநீர் வெளியேற்றத் திட்டத்தை ஜப்பானிய அரசு அண்மையில் அறிவித்தது. அந்நாட்டின் பொது மக்களும், அண்டை நாட்டு மக்களும் இதற்குக் கவலை தெரிவித்ததுடன் கோபமும் அடைந்துள்ளனர். அனைத்தையும் விட, மனித குலத்தின் எதிர்காலத்துக்கு இது அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

அணு மின் நிலையத்திலிருந்து கடலில் கழிவுநீர் வெளியேற்றுவதற்கு ஜப்பானிய அரசு நியாயம் கற்பித்து வருகிறது. ஆனால், இந்தக் கழிவுநீர் பாதுகாப்பாக இருந்தால், ஏன் ஜப்பான் இதை உள்நாட்டிலுள்ள ஏரிகளில் வெளியேற்ற அல்லது மறுசுழற்சி செய்ய வில்லை என்று பல நாடுகளும் சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளன.

மேலும், உலகத்தின் பல நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா தனது நெடுநோக்கு தேவையைக் கருத்தில் கொண்டு, ஜப்பானின் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

கள்ளத்தனமாக கூட்டுச் சேர்ந்துள்ள ஜப்பான் மற்றும் அமெரிக்கா, உயிரினச் சுற்றுச்சூழல் மற்றும் மனித குலத்தின் ஆரோக்கியத்தைக் கூட்டாகச் சீர்க்குலைத்துள்ளன.

உள்நாடு மற்றும் சர்வதேசச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஜப்பானின் இந்தத் திட்டம் வெகுவிரைவில் அகற்றப்பட வேண்டும்.