உலக அமைதிக்கான மிகப் பெரிய அறைகூவலான அமெரிக்கா
2021-12-30 17:32:23

2022ஆம் நிதி ஆண்டு தேசியப் பாதுகாப்பு அங்கீகார மசோதாவில் அமெரிக்க அரசுத் தலைவர் அண்மையில் கையொப்பமிட்டார். புதிய நிதி ஆண்டில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புச் செலவு 76820 கோடி அமெரிக்க டாலராகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டில் இருந்ததை விட 5 விழுக்காடு அதிகமாகும். போர் வியாபாரி மற்றும் இராணுவ வியாபாரி என்ற அமெரிக்காவின் உண்மையான தோற்றத்தை இது வெளிப்படுத்தியுள்ளது. உலக அமைதிக்கான மிகப் பெரிய அறைகூவலாக அமெரிக்கா திகழ்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

அமெரிக்க பெர்க்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் லைக் கூறுகையில், நலன் பெறுதல் என்பதே, அமெரிக்கா போர் தொடுக்கும் மிகப் பெரிய நோக்கமாகும் என்றார். சயநலக் குழுவின் ஆதரவுடன், கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்காவின் இராணுவச் செலவு அதிகரித்து வருகிறது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் இன்பம் என்பது, பொது மக்களின் துயரத்தில் இருந்து அடிப்படையில் பெறப்படுகிறது.

மேலும், அமெரிக்கா தொடர்ந்து போர் தொடுக்கக்கூடும் என்ற வெளிநாடுகளின் கவலையை இந்த மசோதா அதிகரித்துள்ளது. சீன அறைகூவலைச் சமாளிப்பதற்குத் தான், இராணுவச் செலவை அதிகரிக்கிறோம் என்று அமெரிக்கா கூறுவது சாக்குபோக்காகும் என்பது தெளிவாகியுள்ளது.