செய்திச் சுதந்திரம் என்பது ஹாங்காங் சீர்குலைக்கும் மேலை நாடுகளின் கருவி அல்ல!
2021-12-31 17:17:55

அண்மையில், ஸ்டாண்ட் நியூஸ் எனும் இணைய செய்தி ஊடகம் மீது சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் காவற்துறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் 29ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில்  இச்சம்பவத்தைப் பயன்படுத்தி ஹாங்காங்கின் செய்திச் சுதந்திரத்தைச் சீர்குலைத்துள்ளது என்று சீனா மீது அவதூறு பரப்பியுள்ளது. பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில மேலை நாடுகளும் அமெரிக்காவைப் பின்பற்றி செய்திச் சுதந்திரம் என்ற சாக்குபோக்கில் சீனாவின் உள்விவகாரத்தில் தலையிட்டு வருகின்றன. ஹாங்காங்கின் செழுமை மற்றும் நிதானத்தைச் சீர்குலைக்கும் அவற்றின் தீய நோக்கம் முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாண்ட் நியூஸ் இணைய செய்தி ஊடகம் வன்முறைச் சம்பவங்களைப் பெரிதும் அழகுப்படுத்தி மக்களிடையில் ஹாங்காங் காவற்துறையினர் மீதான வெறுப்புணர்வைத் தூண்டும் பல செய்திகளை வெளியிட்டுள்ளது. அது இயல்பான செய்தி ஊடகம் அல்ல. நாடு மற்றும் அரசுக்கு எதிரான தன்மை முனைப்புடன் காணப்படலாம்.

தேசத்துக்கு விரோகமான தகவல்களை வெளியிட்டதால், ஹாங்காங் காவற்துறை சட்டத்தின்படி, தொடர்புடையவரைக் கைது செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு, ஹாங்காங்கின் சட்டப்பூர்வ நிர்வாகம் மற்றும் சமூகத்தின் ஒருங்கிணைப்பைப் பாதுகாக்கும் நியாயமான செயல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

செய்திச் சுதந்திரம் குற்றம் செய்வதற்கான முகமூடி அல்ல. வெளிப்புற சக்தி ஹாங்காங்கிற்குத் தொந்தரவளித்து சீனாவைச் சீர்க்குலைக்கும் அரசியல் கருவியும் அல்ல.

பிளிங்கன் சார்பாக கொண்ட மேலை நாட்டு அரசியல்வாதிகள் செய்திச் சுதந்திரத்தைக் கவனிப்பதற்கு மாறாக, ஹாங்காங்கின் நிதானம் மற்றும் சட்டப்பூர்வ நிர்வாகத்தை பார்க்க விரும்பவில்லை என்பது உண்மை. செய்திச் சுதந்திரத்தின் முழக்கத்தை எழுப்பிய இந்த மேலை நாடுகளில், சொந்த செய்திச் சுதந்திரச் சூழல் இடைவிடாமல் மோசமாகி வருகிறது. ஹாங்காங்கின் செய்திச் சுதந்திரம் பற்றி மதிப்பிட அவற்றுக்குத் என்ன தகுதி இருக்கும்?