எதிர்காலம் நோக்கி உலகத்துடன் முன்னேறும் சீனா
2022-01-01 18:07:54

எதிர்காலம் நோக்கி உலகத்துடன் முன்னேறும் சீனா_fororder_VCG21c648a3aaa

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், புத்தாண்டை முன்னிட்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு வாழ்த்துரை தெரிவித்தார். 2021ஆம் ஆண்டில் சீனா படைத்துள்ள சாதனைகள், சீன மக்களுக்கு நன்மை தருவது மட்டுமல்ல உலகிற்கும் ஆக்கப்பூர்வமான சக்தியையும் ஊட்டியுள்ளன.

சாம்பியாவின் தேசிய ஒற்றுமை கட்சி தலைவர் சிவி ஹமுடுடு கூறுகையில், உலகின் பல்வேறு நாடுகளும், சீன வளர்ச்சியின் அனுபவத்தைக் கற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும். அந்த அனுபவம் பயன் தரும் என்பது, நடைமுறையில் காண்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. தவிரவும், சீனா, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டை நடத்தவும், பல சர்வதேச உச்சிமாநாடு மற்றும் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவும் உள்ளது. சீனா, தொடர்ந்து உண்மையான பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று செயல்படும்.

2022ஆம் ஆண்டிலும் விடா முயற்சியுடன் செயல்படவிருக்கும் ஒரு செழுமையான சீனா, எதிர்காலம் நோக்கி உலகத்துடன் முன்னேறும்.