பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் மூலம் ஒற்றுமை சக்தி
2022-01-04 20:44:59

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒரு மாதத்துக்குப் பின் துவங்கவுள்ளது. முழு உலகமும் அதை எதிர்பார்க்கிறது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பாஹ் அண்மையில் குறிப்பிடுகையில், 2022ஆம் ஆண்டின் முக்கிய தருணமான பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி மூலம், அமைதி, நட்பு மற்றும் ஒற்றுமை எழுச்சியால் உலகம் முழுவதும் இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.

கோடைக்கால ஒலிம்பிக், குளிர்கால ஒலிம்பிக் இரண்டையும் நடத்தும் முதலாவது மாநகரான பெய்ஜிங், உலகின் விருப்பத்தை நிராசைப்படுத்த மாட்டாது. தற்போது 12 போட்டி அரங்குகள், 3 குளிர்கால ஒலிம்பிக் கிராமங்கள், தலைமை ஊடக மையம் முதலியவை பயன்பாட்டுக்கு வந்துள்ளன. உலகின் எதிர்பார்ப்புக்குச் சீனா தயாராக உள்ளது!