அணு ஆயுதமில்லாத உலகிற்கு சீனாவின் பங்கு
2022-01-05 21:03:05

அணு ஆயுதம் கொண்ட சீனா, ரஷியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளின் தலைவர்கள், ஜனவரி 5ஆம் நாள், அணு போர் தடுப்பு மற்றும் படைக்கல போட்டியைத் தவிர்ப்பது பற்றிய கூட்டறிக்கையை வெளியிட்டன. பல்வேறு நாடுகளின் பாதுகாப்பு பாதிக்கப்படாத நிலையில் ஓர் அணு ஆயுதமில்லாத உலகத்தை உருவாக்குவது, இதன் நோக்கமாகும்.

சீனா, ரஷியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள், ஐ.நா பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடுகளும் ஆகும். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் முக்கிய பொறுப்பு அவற்றுக்கு உண்டு. நெடுநோக்கு பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்து, பாதுகாப்பு மீதான உலகின் கவலையைத் தணிவு செய்வதற்கு, இவ்வறிக்கை உதவியளிப்பது உறுதி. அதனால், ஐந்து நாடுகள் இவ்வறிக்கையின் அடிப்படையில், நிரந்தர அமைதியான பாதுகாப்பான உலகத்தை உருவாக்கும் வகையில் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று சீனா விரும்புகிறது.

சர்வதேச சமூகம் இக்கூட்டறிக்கைக்கு வரவேற்பை தெரிவித்தது. அது, 2022ஆம் ஆண்டின் ஊக்கச் சக்தி வாய்ந்த துவக்கமாகும் என்று ரஷிய அரசியல் அறிஞர் யூரி ஸ்விடோவ் குறிப்பிட்டார்.