சின்ச்சியாங்கிலுள்ள டெஸ்லாவின் புதிய கடை ஏன் அமெரிக்காவின் அச்சத்தை ஏற்படுத்தியது?
2022-01-06 19:02:36

அண்மையில் சீனாவின் சின்ச்சியாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஒரு புதிய கடையைத் துவக்கிய கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, சொந்த நாட்டின் அரசியல்வாதிகளால் தாக்கப்பட்டது. அவர்களில் ஒருவரான வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் புசாக்கி கூறுகையில், டெஸ்லா சட்டம், கௌரவம் மற்றும் வாடிக்கையாளர் துறைகளில் கடும் அபாயத்தை எதிர்நோக்கும் என்று மிரட்டல் விடுத்தார்.

உலகளவில் புகழ்பெற்ற மின்னாற்றல் வண்டி தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா சீனாவில் ஏற்கனவே 200க்கும் அதிகமான அனுப்பவ கடை மற்றும் சேவை மையங்களை இயங்கி வருகின்றது. சின்ச்சியாங்கில் ஒரு புதிய கடையை மட்டும் துவக்குவது அமெரிக்க அரசியல்வாதிகளின் தீவிர அச்சத்தை ஏற்படுத்துவதற்கு காரணம் என்ன?

மனித உரிமைக்குப் பின் அமெரிக்காவில் சிலர் பொருளாதாரத்தையும் அரசியல்மயமாக்க முயன்று வருகின்றனர். அவர்கள் அனைத்து வடிவங்களின் மூலம் சின்ச்சியாங்கிற்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றனர். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் திசையைத் தேர்வு செய்ய தனது கூட்டணி நாடுகளையும் தொழில் நிறுவனங்களையும் நிர்ப்பந்தித்த செயல்கள் அசிங்கமானவை. நிறுத்தப்படலாமே!