உண்மையான சின்ஜியாங் எப்படி? அங்கு சென்றவர்களின் கூற்றுக்களைக் கேளுங்கள்!
2022-01-09 19:33:39

உண்மையான சின்ஜியாங் எப்படி? அங்கு சென்றவர்களின் கூற்றுக்களைக் கேளுங்கள்!_fororder_1

சீனாவின் சின்ஜியாங் தலைநகர் உருமுச்சியில் முதலாவது  டெஸ்லா  மையம் அதிகாரப்பூர்வமாகத் திறந்துக்கப்பட்டு  இயங்கி வருவதாக, அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் தகவலை வெளியிட்டது. ஆனால்,  டெஸ்லா நிறுவனத்தின் இம்முடிவை அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

உண்மையான சின்ஜியாங் எப்படி? அங்கு சென்றவர்களின் கூற்றுக்களைக் கேளுங்கள்!_fororder_2 

இதற்கு முன்பே,  அமெரிக்க நிறுவனங்கள், சீனாவின் சின்ஜியாங்குடனான வர்த்தக மற்றும் வணிக தொடர்பைத் தடுக்கும் விதமாக, அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் மசோதாவைச் சட்டமாக்க முயன்றுள்ளனர். தற்போது, டெஸ்லா நிறுவனத்தின் இச்செயல், அந்த அரசியல்வாதிகளுக்கு பதில் தருவது போல் அமைந்துள்ளது.

உண்மையான சின்ஜியாங் எப்படி இருக்கும் என்பதற்கு டெஸ்லா நிறுவனத்தின் நடவடிக்கையே பதிலாக அமைந்துள்ளது. மேலும், உலகளவில் சின்ஜியாங்கிற்கு சென்ற பல வெளிநாட்டவர்கள்  தங்களது அனுபவங்களின் மூலம் விளக்கம் அளித்துள்ளனர்.

உண்மையான சின்ஜியாங் எப்படி? அங்கு சென்றவர்களின் கூற்றுக்களைக் கேளுங்கள்!_fororder_3

2021ஆம் ஆண்டின் இறுதியில், ஜப்பானின் ஓசாகா நகரிலுள்ள சீனத் துணைத் தூதரகம், சின்ஜியாங்கில் சுற்றுலாப் பயணம் என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்தது. ஒரு மாத காலத்துக்குக்குள், 1,028 ஜப்பானியர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். ஜப்பானின் இணைய பயனர் ஒருவர்,  உயர்வேக தொடர்வண்டியின் மூலம் ஷாங்காயில் இருந்து உருமுச்சிக்கு சென்று  நவீன பட்டுப் பாதையைப் பார்த்து உணர விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில்,  பிற நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் சீனாவிற்கு வருகை தந்து, உண்மையான சின்ஜியாங்கை அனுபவித்துச் செல்கின்றனர்.

உண்மையான சின்ஜியாங் எப்படி? அங்கு சென்றவர்களின் கூற்றுக்களைக் கேளுங்கள்!_fororder_4

இவர்களில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இளைஞர் காவ்யோஸியும் ஒருவர் ஆவர். சமூக வலைத்தளத்தில் 3கோடிக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ள அவர், சீனாவில் குறைந்தது 15 நகரங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளார். 2021ஆம் ஆண்டு சின்ஜியாங்கில் பயணம் செய்தார். சின்ஜியாங் மக்களின் வாழ்க்கை பற்றி அதிக ஆதாரத்துடன்  பேசுபவர்கள், உள்ளூர் வாசிகள் ஆவர் என்று காவ்யோஸி கருதுகிறார்.

உண்மையான சின்ஜியாங் எப்படி? அங்கு சென்றவர்களின் கூற்றுக்களைக் கேளுங்கள்!_fororder_5

உண்மையான சின்ஜியாங் எப்படி? அங்கு சென்றவர்களின் கூற்றுக்களைக் கேளுங்கள்!_fororder_6

காவ்யோஸி போலவே மேலதிக வெளிநாட்டவர்கள் சீனாவை நெருக்கமாக  அறிந்துக் கொள்ள ஆவலுடன் இருக்கின்றனர். அவர்கள் எடுத்து வெளியிடும் காணொளிப் பதிவுகளை சீனா மற்றும் வெளிநாடுகளின் வலைத்தளங்களில் கண்டு ரசிக்கலாம்.

2020ஆம் ஆண்டு, சின்ஜியாங்கில் 15.8 கோடி சுற்றுலாப் பயணிகள் வரவேற்கப்பட்டனர். அவர்கள், சின்ஜியாங்கின் வளர்ச்சியை நேரில் பார்த்து, கேமரா மூலம் தங்களின் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளனர். அலுவலகத்தின் இருக்கையில் அமர்ந்து விமர்சித்து வரும் அமெரிக்க அரசியல்வாதிகளில் எத்தனை பேர் சின்ஜியாங்கிற்கு சென்றார்கள்? ஆதாரமன்றி பொய்களை உருவாக்குவதில் ஈடுபட்டு வரும் அவர்கள், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.