ஆசிய-பசிபிக் பிரதேசத்துக்கு யார் அச்சுறுத்தல்?
2022-01-09 19:25:15

புத்தாண்டின் தொடக்கத்தில், ஆசிய-பசிபிக் பிரதேச மக்கள் அமைதியையும் நிதானத்தையும் எதிர்பார்க்கின்றனர். அதே சமயத்தில், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர்களின் காணொளிச் சந்திப்பும், அமெரிக்கா மற்றும் ஜப்பானின் வெளியுறவு அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சர்கள் இடையேயான காணொளிப் பேச்சுவார்த்தையும் முறையே நடைபெற்றன. பனிப் போர் எண்ணம் நிறைந்து காணப்பட்ட இந்த இரு பேச்சுவார்த்தைகளிலும், அமெரிக்காவும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட கூட்டணிகளும், பொய் கூற்றைப் பரப்பி, ஆயுத ஆற்றலைக் காட்டி, பிற நாடுகளின் உள்விவகாரத்தைத் தலையிட்டு, பிரதேசத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலைக் கொண்டு வந்தன.

ஜனவரி 6-ஆம் நாள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் கையொப்பமிட்ட பரிமாற்ற அணுகுமுறை ஒப்பந்தம், சீனாவின் உள் விவகாரத்தில் தலையீடு செய்கின்றது. அமெரிக்காவின் தலைமையிலான ஜப்பானும் ஆஸ்திரேலியாவும், முன்பு தென் சீனக் கடலின் அமைதியான நிலைமைக்கும் தைவான் நீரிணையின் இரு கரையின் நட்பு நிலைமைக்கும் தற்போது குழப்பம் உருவாக்கி வருகின்றன.

அமெரிக்கா மற்றும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சர்கள் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், ஜப்பான் மற்றும் அமெரிக்கக் கூட்டணியின் முக்கியத்துவத்தை இரு தரப்பும் வலியுறுத்தின. மேலும், கூறப்படும் சீனா அச்சுறுத்தலைச் சமாளிக்க, புதிய பாதுகாப்பு உடன்படிக்கையில் கையொப்பமிடுவதாக இரு தரப்பும் அறிவித்துள்ளன. தங்களது இராணுவ ஆற்றலை வலுப்படுத்துவதற்கான சாக்குப் போக்கு இது தான். ஜப்பான் மற்றும் அமெரிக்கக் கூட்டணி என்பது பனிப்போர் காலத்தில் ஏற்பட்ட விளைவாகும். இராணுவச் செலவை தொடர்ந்து அதிகரித்து வரும் இரு நாடுகளும், ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் என்ன செய்ய முயற்சிக்கின்றன?

தவிரவும், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகியவை, அணு நீர்மூழ்கிக் கப்பல் ஒத்துழைப்பு மேற்கொள்வதாக அறிவித்துள்ளன. அணு விரிவாக்கம் மற்றும் பிரதேச இராணுவப் போட்டியின் இடர்பாட்டை இது அதிகரித்துள்ளது. ஜப்பான் மாசுபட்ட அணுஉலை கழிவு நீரை வலுக்கட்டாயமாக கடலில் வெளியேற்றி, இயற்சைச் சூழலைச் சீர்குலைத்து, பொது மக்களின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இடைவிடாமல் கூட்டு இராணுவப் பயிற்சியை நடத்தின. மேற்கூறிய செய்லகள், இப்பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன.

இந்நாடுகள் "சுதந்திரம் மற்றும் திறப்பு"  போன்ற முழக்கத்தைப் பரப்பி வருவது, பாசாங்குத்தனமானதாகவும் அபத்தமானதாகவும் உள்ளது என்பது மெய்ப்பிக்கப்பட்டுகிறது.