உண்மையான நண்பர் என்றால் என்ன? சீனா மற்றும் ஆப்பிரிக்காவை போன்றதே
2022-01-10 20:57:38

அண்மையில், கென்யா அரசுத் தலைவர் உஹுரு கென்யாட்டா, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயுடன் இணைந்து மும்பாசாவிலுள்ள எண்ணெய் துறைமுகத்தின் கட்டுமானம் நிறைவுபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது,  கென்யாவின் வளர்ச்சியை ஆதரித்து வரும் சீனாவைப் பாராட்டியதோடு, சீனா உண்மையான நண்பரே எனவும் அழைத்தார்.

புதியதோர் ஆண்டில் சீன வெளியுறவு அமைச்சர் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் பயணம் செய்வது வழக்கம். அது 32 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகிறது. கோவிட்-19 அறைகூவலைச் சந்தித்தப் போதிலும், சீனா இவ்வாண்டு திட்டப்படி இந்த பயணம் மேற்கொள்கிறது. இது, சீனா – ஆப்பிரிக்கா இடையேயான நட்பு என்ற அடிப்படையை வெளிக்காட்டுகிறது.

சீன – ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 8ஆவது அமைச்சர் நிலைக் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்,   ஆப்பிரிக்காவுடனான 9 பெரிய திட்டப்பணிகளை அறிவித்தார். தற்போது, கூட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகளை நடைமுறையில் கொண்டு வருவது,  வெளியுறவு அமைச்சரின் இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

10ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேலான இருப்புப்பாதை, கிட்டத்தட்ட 1 லட்சம் கிலோமீட்டர் நெடுஞ்சாலை, சுமார் ஆயிரம் பாலங்கள் மற்றும் நூறு துறைமுகங்கள், பல மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் ஆகியவை அனைத்தும், சீன –ஆப்பிரிக்க ஒத்துழைப்பால் பெறப்பட்ட உண்மையான சாதனைகளாகும். இவை ஆப்பிரிக்க மக்களை பயனடையச் செய்கின்றன.

எந்த அரசியல் நிபந்தனையும் இல்லாமல்,  ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிக்கும் அடிப்படையில், சீனா ஆப்பிரிக்காவுடனான ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகிறது. சீனா, நம்பிக்கை மற்றும் நட்புறவை ஆப்பிரிக்காவுக்கு கொண்டு சென்றுள்ளது.  இந்த காரணம் தான், சீன – ஆப்பிரிக்க ஒத்துழைப்பு நிலையாகவும் நீண்டக்காலமாகவும் முன்னேறிச் செல்லும்.