ஒழுக்கையும் அதிகாரத்தையும் இழந்த அமெரிக்கா
2022-01-12 10:23:37

வெளிநாடுகளில் அமெரிக்காவின் "கறுப்பு சிறைகள்" தன்னிச்சையான தடுப்புக்காவல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கான சின்னமாக மாறிவிட்டன. ஐ.நா. வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2003ஆம் ஆண்டில் குவாண்டனாமோ வளைகுடா தடுப்பு முகாமில் 700 கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இதில் இதுவரையிலும், இன்னும் 39 கைதிகள் உள்ளனர். ஆனால் அவர்களிலுள்ள 9 பேர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டனர் அல்லது குற்றமுடையதாக உறுதிசெய்யப்பட்டனர். 2002ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை, 9 கைதிகள் உயிரிழந்தனர். அவர்களில் யாரும் குற்றம் சாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த 20 ஆண்டுகளாக, உலகத்தைச் சேர்ந்த 85 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் "பயங்கரவாத எதிர்ப்பு" நடவடிக்கைகளை அமெரிக்கா நடத்துகிறது. இதில் 8 இலட்சத்து 97 ஆயிரம் பேர் முதல் 9 இலட்சத்து 29 ஆயிரம் பேர் போர் வன்முறையால் நேரடியாக இறந்தனர். அகதிகள் மற்றும் வீடுவாசலின்றி அல்லல்படும் மக்களின் தொகை 3 கோடியே 80 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. போர் மற்றும் அத்துமீறல் நடவடிக்கைகளால் உலகளவில் அமெரிக்கா தனது ஒழுக்கையும் அதிகாரத்தையும் இழந்துவிட்டது என்று நியூயார்க் டைம்ஸ் செய்திதாள் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.