நிர்பந்தத்தின் அடிப்படையிலான தூதாண்மை சரியல்ல
2022-01-13 10:41:32

ஒரே சீனா என்ற கோட்பாட்டை சீர்குலைக்கும் லிதுவானியாவின் செயல் சர்வதேச அளவில் சந்தேகத்தையும் எதிர்ப்பையும் கிளங்பியுள்ளது. இதற்குரிய எதிர்ப்பு நடவடிக்கைகளைச் சீனா மேற்கொண்டு வருகின்றது. ஆனால், சீனாவின் இயல்பான இந்த தூதாண்மை நடவடிக்கை நிர்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் பல முறை தெரிவித்தனர். இது அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும் போலித்தனத் தன்மையையும் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது.

வரலாற்றை மீளாய்வு செய்தால், நிர்பந்தத்தின் அடிப்படையிலான தூதாண்மை என்பது அமெரிக்காவின் காப்புரிமை என்று கண்டுபிடிக்க முடியும். ராணுவ அச்சுறுத்தல், அரசியல் தனிமை, பொருளாதாரத் தடை, தொழில்நுட்ப முற்றுகை முதலியவற்றின் மூலம் இதர நாடுகளை அமெரிக்காவின் கோரிக்கையைப் பின்பற்ற செய்வதும், அமெரிக்காவின் நெடுநோக்கையும் ஆதிக்க தகுநிலையையும் பேணிக்காப்பதும் இதன் மைய இலக்காகும்.

எந்த நாடு முழு உலகையும் அச்சுறுத்துகின்றது, எந்த நாடு பன்னாட்டு ஒழுங்கையும் பல தரப்பு விதிகளையும் அத்து மீறுகின்றது என்பதை உலக மக்கள் தெளிவாக அறிந்து கொண்டுள்ளனர்.