அமெரிக்காவின் மனித உரிமைப் பாணி — கேலிக்கூத்து
2022-01-14 10:30:48

குவாண்டனாமோ தடுப்பு முகாமை அமெரிக்கா நிறுவி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளில் கைதிகளைச் சித்திரவதைப்படுத்தும் செயலை அமெரிக்கா நிறுத்தாமல், அதன் கறுப்பு சிறைகளைப் பல நாடுகளில் நிறுவி வருகின்றது. காரணம், அமெரிக்க உள்நாட்டுச் சட்டத்தின்படி சிறைக்கைதிகளை வெளியுலகத் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்ட ரகசிய சிறைகளில் வைப்பதற்கு அனுமதிக்காது.

வாஷிங்டன் போஸ்ட் 2005ஆம் ஆண்டு வெளியிட்ட செய்தியின்படி, அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஜ.ஏ, தாய்லாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தனது ரகசிய சிறை வலைப்பின்னலை உருவாக்கி வருகின்றது.

ஐ.நா மனித உரிமைச் செயல் குழு நிறுவிய ஒரு சுயேச்சை நிபுணர் குழு அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், புலன்விசாரணை செய்யாத நிலையில் அமெரிக்கா தனது விருப்பத்தின்படி மக்களைத் தடைக்காவலில் வைத்து, சித்திரவதை செய்யும் நடவடிக்கைகள், எந்த ஒரு நாட்டையும் குறிப்பாக மனித உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என பாறைச்சாற்றிய நாட்டை பொருத்தவரை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டனம் தெரிவித்தது.