© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீன சுங்க துறை தலைமைப் பணியகம் 14ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2021ஆம் ஆண்டில் சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 6 இலட்சத்து 5 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டி, வரலாற்றில் மிக உயர்வான பதிவாகியுள்ளது.
2021ஆம் ஆண்டில், கரோனா வைரஸ் பரவலின் நிலைமை சிக்கலாக இருந்தது. பொருளாதார மீட்சியில் சமமின்மை பிரச்சினை நிலவியது. நிறைய அறைகூவல்களைச் சந்தித்த சீன சர்வதேச வர்த்தகம், சாதனைகளை பெற்ற காரணங்கள் என்ன?
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதிலும் பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், சீனா தலைசிறந்த முறையில் செயல்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் நுகர்வு தேவை, சர்வதேச வர்த்தக வளர்ச்சிக்கு வலிமை மிக்க ஆதரவு அளித்துள்ளது.
உலக பொருளாதார மீட்சியும் அன்னிய தேவை அதிகரிப்பும், சீன சர்வதேச வர்த்தகத்திற்குத் துணை புரிந்தது.
கரோனா வைரஸ் பரவலின் நிலைமையில் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு அளித்துள்ள சீன சர்வதேச வர்த்தகம்,, உலக பொருளாதாரத்தையும் முன்னேற்றும்.
இவ்வாண்டு ஜனவரி முதல் நாள், ஆர் சி இ பி என்ற உடன்படிக்கை, ஆசியானைச் சேர்ந்த 6 நாடுகள், சீனா, ஜப்பான், நியூசிலந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அமலாக்கப்பட்டது. உலகில் மிக பெரிய தாராள வர்த்தக மண்டலம் இயங்கிய பிறகு, இம்மண்டலத்திலுள்ள வர்த்தகமும் முதலீடும் பெருமளவில் முன்னேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.