உலகப் பொருளாதார மீட்சிக்குத் துணைப் புரிந்த சீனப் பொருளாதாரம்
2022-01-17 20:02:44

ஓராண்டுக்கு முன், பொருளாதார வளர்ச்சிக் கண்ட ஒரே ஒரு நாடாகச் சீனா விளங்கிய போது, சீனாவின் பொருளாதார வளர்ச்சி, உலகப் பொருளாதார மீட்சிக்கு உதவியளித்து வருகிறது என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட 2021ஆம் ஆண்டு பொருளாதாரப் புள்ளிவிவரங்களின்படி, உலகப் பொருளாதார மீட்சிக்கு வழிகாட்டிய முக்கிய ஆற்றலாக சீனா விளங்கியுள்ளது.

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் ஜனவரி 17ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2021ஆம் ஆண்டு சீனப் பொருளாதாரம் தொடர்ச்சியாக சீராக வளர்ந்து வருகிறது. முக்கிய குறிக்கோள்கள் முற்றிலும் நனவாக்கப்பட்டுள்ளன. மொத்த பொருளாதார மதிப்பு 11 லட்சம் கோடி யுவானைத் தாண்டி, உலகத்தில் 2வது இடத்தை வகித்துள்ளது. கடந்த ஆண்டில் இருந்ததை விட இது 8.1 விழுக்காடு அதிகமாகும். உலகப் பொருளாதாரத்தின் வலிமைமிக்க உயிராற்றலை இந்த அதிகரிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டுத் தேவையின் அதிகரிப்பும், உள்நாட்டு வெளிநாட்டுப் பொருளாதாரச் சுழற்சியும், சீனப் பொருளாதாரத்தின் மீட்சிக்குத் துணைப் புரியும்.

உலகின் 2வது பெரிய நாடான சீனாவின் பொருளாதார வளரச்சி, உலகப் பொருளாதாரத்துக்கு நம்பிக்கை, உறுதி தன்மை, வாய்ப்பு, நலன் ஆகியவற்றை வழங்கியுள்ளது. மேலும், உலகில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கு, “சீனத் தயாரிப்புகள்” வலிமைமிக்க பாதுகாப்புப் பாதையை உருவாக்கியுள்ளது. உலகம் குறிப்பாக வளரும் நாடுகளின் பொருளாதார மீட்சிக்குச் சீனா முக்கிய உதவியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.