மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட சமூகம் முக்கியமானது – கிளவுஸ் சுவாப்
2022-01-19 16:32:44

2017ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட சமூகம் என்ற ஆலோசனை முன்வைத்தார். அதைத் தொடர்ந்து, இந்த ஆலோசனை, ஐ.நா. பாதுகாப்பு அவையின் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டது. உலகளாவிய முக்கியத்துவத்தை இது வெளிக்காட்டுகிறது என்று உலக பொருளாதார அரங்கின் நிறுவனர்  கிளவுஸ் சுவாப் சமீபத்தில் தெரவித்தார்.

மேலும் சீனா சமீபக்காலமாக முன்வைக்கும் “பொதுவான செழிப்பு” என்ற கொள்கை, உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தகைய ஆலோசனை சர்வதேசச் சமூகத்திற்கும்  பொருத்தமானது  என்றார் சுவாப்.

கடந்த 2 ஆண்டுகளில், கோவிட்-19 தொற்று சீர்குலைவு விளைவித்து வருகிறது. மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட சமூகம் என்ற ஆலோசனை, சரியான நேரத்தின் நினைவாகும். அதாவது, இடர்பாடுகளையும் அறைகூவல்களையும் கூட்டாக சமைளிக்க நாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கிளவுஸ் சுவாப் கூறினார்.