இடைவெளியைக் கடந்து உலகளாவிய வளர்ச்சியை மீண்டும் மேம்படுத்துவது எப்படி?
2022-01-19 15:56:31

நூறாண்டு காலங்களில் இல்லாத பெரும் மாற்றம் மற்றும் கோவிட்-19 தொற்று போன்றவற்றால், உலக வளர்ச்சிப் போக்கில் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மனிதன் வளர்ச்சி குறியீடு, 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதல்முறையாக சரிவை எட்டியது. உணவு பாதுகாப்பு, கல்வி, வேலை, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் வாழ்வாதாரத் துறைகளில் ஏற்பட்டுள்ள இன்னல்களை கடந்து சென்று உலக வளர்ச்சியை மீண்டும் மேம்படுத்துவது எப்படி?

உலகப் பொருளதார மன்றத்தின் 2022ஆம் ஆண்டு டாவோஸ் மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 17ஆம் நாள் காணொளி வாயிலாக உரைநிகழ்த்துகையில் ‘பல்வேறு தரப்புகளுடன் இணைந்து ஒத்துழைத்து, உலக வளர்ச்சிக்கான முன்மொழிவை நடைமுறையில் கொண்டு வந்து, அனைத்து நாடுகளையும் உள்ளடக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டு செப்டம்பர், ஐ.நா. பொதுப் பேரவைக் கூட்டத் தொடரில், உலக வளர்ச்சிக்கான முன்மொழிவை முன்வைத்த ஷிச்சின்பிங்,  ‘சர்வதேச சமூகம், வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் அவசரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். 17ஆம் நாளன்று டாவோஸ் மாநாட்டில் தனது உரையில், ‘எவ்ளளவு சிரமம் இருந்தாலும், மக்கள் முதன்மை என்ற வளர்ச்சி கோட்பாட்டைப் பின்பற்றி, வளர்ச்சியை மேம்படுத்துதல், மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தல் ஆகியவை உலகளாவிய ஒட்டுமொத்த கொள்கைளின் முனைப்பான இடத்தில் வைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பு, ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி ஆகியவை  சர்வதேச ஒத்துழைப்பு மேடையாக மாறியுள்ளன. இவற்றின் மூலம் சீனா, உலக நாடுகளுடன் வளர்ச்சிச் சாதனைகளைப் பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.