அமெரிக்க ஜனநாயகத்தின் தோல்வி
2022-01-21 18:06:56

புதிய ரக கரோனா வைரஸை வெல்ல வேண்டும் என்று 2021ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் நாள், அமெரிக்க அரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், ஓராண்டுக்குப் பிறகு, அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்கிறது, பண வீக்க விகிதம் உயர்ந்துள்ளது, அரசியல் தீவிரவாதம் மோசமாகி வருகின்றது. அமெரிக்க அரசுத் தலைவர் பதவி ஏற்ற போது அளித்த வாக்குறுதிகள் எல்லாம் நனவாக்கப்படவில்லை.

நிறைய பணம் பணக்காரர்களின் கையில் உள்ளது. ஏழைகள் கடந்த 40 ஆண்டுகளாக மிக கடினமான பண வீக்கத்தில் சிக்கி இருக்கின்றனர்.

நான் அமெரிக்க அரசுத் தலைவராகக் தேர்ந்தெடுக்கப்பட்டது, தனி ஒரு வேட்பாளரின் வெற்றியல்ல. இது அமெரிக்க ஜனநாயகத்தின் வெற்றியாகும் என்று ஓராண்டுக்கு முன், அமெரிக்க அரசுத் தலைவர் பதவி ஏற்ற போது பைடன் தெரிவித்தார். ஆனால் இது வேட்பாளரின் தோல்வியல்ல. இது அமெரிக்க ஜனநாயகத்தின் தோல்வியாகும் என்று 2021ஆம் ஆண்டின் உண்மைகள் நிரூபித்துள்ளன.