© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
எம் ஐ டி பல்கலைக்கழகத்தின் சீன வம்சாவழி பேராசிரியர் ச்சேன் காங் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை அமெரிக்க சட்ட அமைச்சகம் ஜனவரி 20ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்தது. அது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், சீன இனிஷியேட்டிவ் என்ற திட்டம் சந்தித்த புதிய பின்னடைவு இதுவாகும் என்று குறிப்பிடப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் இயல்பான மனிதத் தொடர்பு மற்றும் அறிவியல் பரிமாற்றத்துக்கு அமெரிக்கா தடை ஏற்படுத்தி வருகிறது. இப்பின்னணியில் தான் 2018ஆம் ஆண்டில் சீனா மீதான இந்தச் செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. உண்மையான ஆதாரமில்லாத நிலையில், சீன வம்சாவழி அறிவியலாளர்களைக் குற்றவாளிகள் என்று அமெரிக்க அரசு அப்பட்டமாகக் கூறுவதாக அமெரிக்க ஊடகங்கள் விமர்சனம் தெரிவித்தன. இத்திட்டத்தின் நோக்கம் பற்றி சந்தேகம் தெரிவிக்கும் வகையில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 2000 அறிஞர்கள், சட்ட அமைச்சருக்குக் கூட்டுக் கடிதத்தை அனுப்பியிருந்தனர்.
சீனா மீதான செயல் திட்டம், அமெரிக்காவின் அறநெறிக்குப் புறம்பான மனநிலையை வெளிக்காட்டியுள்ளதுடன், ஏற்கனவே இருந்து வரும் இனவெறியை மேலும் தீவிரமாக்கியுள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.