ஆனால் வேலைப்பளு, இசை மீதான குவான் மு செனின் ஆர்வத்தைப் பாதிக்கவில்லை. வேலைக்குச் செல்வது தவிர, ஓய்வு நேரத்தில் அவர் பாடல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர் பணி புரிந்த தொழிற்சாலைக்குப் பின்புறம் பெரிய குளம் இருந்தது. அதிகாலையில் அங்கு அமைதி நிலவியது. குவான் மு சென் அடிக்கடி குளத்தின் ஓரத்தில் பாடல் பயிறஅசியில் ஈடுபடுவார். இவ்வாலையின் தொழிலாளர்கள் அடிக்கடி அவருக்கு ஊக்கமளித்தனர். எனவே, அவர் மேன்மேலும் சிறப்பாகப் பாடலானார்.
இவ்வாலையில் அவர் புகழ் பெறலானார். தொழிலாளர் கூட்டம் நடத்தும் போதெல்லாம் அவர் பாட்டுப் பாடுவார். அவர் பாடி முடித்ததும் தொழிலாளர்கள் ஆரவாரமாக கைதட்டினர். இது பசு மரத்தாணி போல் அவரது உள்ளத்தில் கிடக்கிறது.
1 2 3 4 5 6 7
|