
1978ல் சீனாவில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி துவங்கியது. குவான் மு சென் தன் கலையிலான வசந்தகாலத்தை வரவேற்றார். அவர் தொழிற்சாலையிலிருந்து தியென் சின் ஆடல் பாடல் குழுவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அது மதற் கொண்டு, அவர் தொழில் முறைப் பாடகியானார். 4, 5 ஆண்டுகளில் அவர் தம் இனிமையான மனதுக்கொத்த பாட்டொலியுடன் நாடெங்கும் சென்று, பாடி புகழலானார்.
1984ல் குவான் மு சென் சீன மத்திய கூடுதலான இசைக் கல்லூரியின் பாடல் கலைத் துறையின் தேர்வில் வெற்றி பெற்று முறையான இசைக் கல்வியும் பயிற்சியும் பெற துவங்கினார். இது அவருக்கு மேலும் கூடுதலான இசை அறிவை வழங்கியுள்ளது. அவர் மேலை நாடுகளின் பாட்டு முறையைக் கற்றுக்கொண்டு அதை சீனத் தேசிய இசையில் சேர்த்துள்ளார். இதனால் அவருடைய தன்னிகரற்ற சிறப்பான பாடல் நடை உருவாயிற்று.
1 2 3 4 5 6 7
|