நூல்களைப் படிப்பது, சுற்றுலா மேற்கொள்வது, நண்பர்களுடன் அளவளாவுவது ஆகியவற்றை குவான் மு சென் விரும்புகிறார். அவருடைய கணவன், ஓர் அறிஞர். அவர்கள் மிகவும் அன்பாக வாழ்க்கை நடத்துகின்றனர். அவர் கூறியதாவது—
"என் கணவன் என் ஆதர்ச வீரராவார். அவர் இடைவிடாமல் எனக்கு அறிவூட்டுகிறார். எனக்கு சில உண்மைகளையும் எடுத்துரைக்கிறார். நாங்கள் இருவரும் நூல்களைப் படிக்கவும் நண்பர்களுடன் நன்கு பழகவும் விரும்புகிறோம். இதன் மூலம் மனித வாழ்வின் தத்துவங்களைக் கூட்டாக கலந்தாராய்ந்து வருகிறோம்" என்ரார் அவர். 1 2 3 4 5 6 7
|