குவான் மு சென், தன்னடக்கமுடையவர். இப்புகழ், தன்னை விரும்பும் ரசிகர்களிடமிருந்த தான் வருகிறது என்று அவர் கருதுகிறார். அவர் கூறியதாவது—
"ரசிகர் எனக்கு ஊக்கம் வழங்கி என் மீது அன்பும் காட்டியுள்ளனர். தம் உள்ளத்திலிருந்து வெளிக்காட்டிய மதிப்பு—ஒரு வகை அன்பு—அதாவது என் உணர்வு உலகில் ஆழந்து பதிந்து கிடக்கும் பொருள் என்றுமே அழிக்கப்பட்ட முடியாது" என்றார் அவர்.
பாடல் தவிர, சீன பொது நல துறையில் அவர் பேரார்வம் காட்டுகிறார். அவர் எப்போதும் சீனாவின் ஆசை திட்டப்பணியில் பெரும் கவனம் செலுத்துகிறார். ஆசை திட்டப்பணி என்றால், சீன இளைஞர் வளர்ச்சி நிதியம் நிறுவிய வறிய பிரதேசத்துக் குழந்தைகளின் படிப்புக்கு உதவும் பொது நலப் பணியாகும். கடந்த 15 ஆண்டுகளில் அவர் பல பத்து வறிய மாணவருக்கு நிதி உதவி வழங்கியுள்ளார். இதனால் இம்மாணவர்கள் வெற்றகரமாக தம் இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடிக்குக்கொண்டனர். அவர் அடிக்கடி பல்வகை சிரமதான மீட்புதவி அரங்கேற்றங்களில் கலந்து கொள்கிறார்.
1 2 3 4 5 6 7
|