நவம்பர் திங்கள் 29ம் நாள், சீன ஹென் சி மாநிலத்தின் சி ஆன் நகரில் முக்கிய li jia he நீர் தேக்கத் திட்டப்பணி துவங்கியது. சி ஆன் மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கின்ற இத்திட்டப்பணியில், சீன அரசு 170 கோடி யுவானை ஒதுக்கீடு செய்கிறது. சி ஆங் நகரின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த கமிட்டியின் துணை தலைவர் liu qin இத்திட்டப்பணியின் முக்கியத்துவத்தை விளக்கினார். அவர் கூறியதாவது,
இத்திட்டப்பணி முடிந்த பின், ஓராண்டின் நீர் வினியோக அளவு, 8 கோடியே 39 இலட்சத்து 30 ஆயிரம் கன மீட்டர் அதிகரிக்கும். எனவே கிழக்கு சி ஆன் நகரின் 20 இலட்சத்திற்கு அதிகமானோரின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். இப்பிரதேசத்தின் சுற்றுச்சூழல் மற்றும் முதலீட்டு சூழ்நிலையை மேம்படுத்தி, பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் விரைவான வளர்ச்சிக்கு உத்தரவாதமளிப்பதற்கு, இது முக்கிய பங்காற்றும் என்றார் அவர்.
1 2 3 4 5 6
|