நடுவண் அரசு நிதியின் ஆதரவுடன், சீனாவில் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் பல திட்டப்பணிகள் துவங்கியுள்ளன. அண்மையில், வடக்கிழக்கு சீனாவின் liao ning மாநிலத்தின் shen yang நகரில் தெரு ஒழுங்குகளை மேம்படுத்தும் திட்டப்பணி நடைமுறைக்கு வந்தது. சீன நடுவன் அரசும் உள்ளூர் அரசும் இத்திட்டப்பணியில் சுமார் 100 கோடி யுவானை ஒதுக்கீடு செய்தது. அதன்படி 800க்கு மேலான தெரு ஒழுங்குகளையும் 1200க்கு அதிகமான பழைய குடியிருப்பு பிரதேசங்களையும் புதுப்பித்து சீராக்கும். இது பற்றி, shen yang நகரின் கட்டுமான நிர்வாக ஆணையத்தின் தலைவர் yu shenguang கூறியதாவது,
மக்களின் அன்றாட வாழ்க்கையிலான சிக்கல்களைத் தீர்த்து, அவர்களுக்கான மேலும் சீரான குடியிருப்பு சுற்றுச்சூழலை உருவாக்குவது எங்கள் முக்கிய பணியாகும் என்றார் அவர்.
இதைத் தவிர, இறுக்கமற்ற நாணயக் கொள்கை, பரந்த கவனத்தை ஈர்த்தது. நிதியை வழங்கி கடன் வரையறையை குறைப்பது, எதிர்கால நாணயக் கொள்கையின் அடிப்படையாக கொள்ளப்படும். அதன் மூலம், உள்நாட்டு தேவையை அதிகரித்து பொருளாதாரம் வளர்க்கப்படும்.
1 2 3 4 5 6
|