• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-01-12 18:23:08    
நிதி நெருக்கடியைச் சமாளிக்கின்ற நடவடிக்கைகள்

cri

li jia he நீர் தேக்கத் திட்டப்பணி தவிர, அதே நாளில், விமானப் பயண நிர்வாகத் தளம், உரியின சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டப்பணி முதலிய 10 கோடி யுவானுக்கு அதிகமான மதிப்புள்ள 6 அடிப்படை வசதிகளின் கட்டுமானங்களும் துவக்கப்பட்டன. உள்நாட்டு தேவையை விரிவாக்கி பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்துவதென சீன அரசு அண்மையில் வெளியிட்ட கொள்கையே இப்பணிகள் தொடங்கப்படுவதற்கு காரணமாகும். நடுவண் அரசு நிதியின் ஆதரவினால் தான், சி ஆன் நகரின் இத்திட்டப்பணிகளை முன்கூடியே துவக்க முடிகிறது. எனவே சி ஆன் மக்கள் முன்கூடியே நலன்களை பெறுவர்.

இவ்வாண்டு அமெரிக்க கடன் சந்தையின் வீழ்ச்சியால் ஏற்பட்ட நிதி நெருக்கடி, முழு உலகையும் பாதித்துள்ளது. சீனப் பொருளாதாரமும் இதிலிருந்து தப்ப முடியவில்லை. இதனை சமாளிக்க, சீன அரசு, உரிய நேரத்தில் ஒட்டுமொத்த கொள்கைகளைச் சரிப்படுத்தி, உள்நாட்டு தேவையை விரிவாக்கும் பயனுள்ள 10 நடவடிக்கைகளை வெளியிட்டது. 4 இலட்சம் கோடி யுவான் மதிப்புள்ள இந்த பொருளாதார வளர்ச்சித் திட்டம், அதிக கவனத்தை ஈர்த்தது.

1 2 3 4 5 6