• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-18 16:35:26    
பேராசிரியரான தொழிலாளி Dou Tie Cheng

cri
Dou Tie Cheng என்பவர், சீன இருப்புப் பாதை கூட்டு நிறுவனத்தின் உயர் நிலை மின்னாற்றல் தொழில் நுட்ப வல்லுநர் ஆவார். இருப்புப்பாதை திட்டப்பணிகளின் கட்டுமானத்தில் இந்நிறுவனம் முக்கியமாக ஈடுபடுகின்றது. Dou Tie Chengகிற்கு வயது 53. இடைநிலை பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற பின், அவர் தொழில் நுட்ப தொழிலாளியாக பணி புரியத் துவங்கினார். அவர் இது வரை 30 ஆண்டுகள் பணி புரிந்து வருகின்றார். கடந்த 30 ஆண்டுகளில், தொழில் நுட்பப் புத்தாக்கத்தின் மூலம், தனது நிறுவனத்திற்கு ஒரு கோடியே 38 இலட்சம் யுவான் இலாபத்தை ஈட்டி தந்துள்ளார். தற்காலத்தின் நிபுணர் நிலை தொழில் நுட்பப் தொழிலாளி என அவர் போற்றப்படுகின்றார். பல்வேறு பணிகளின் காரணமாக, Dou Tie Cheng நீண்டகாலமாக வெளியூரில் பணிபுரிந்து வருகின்றார். அவரால் வீடு திரும்ப முடியவில்லை. அது மட்டுமல்ல, அவர் அடிக்கடி வேறிடம் சென்று குடிபெயர வேண்டியுள்ளது. எனவே அவரது வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கின்றது.
1 2 3 4 5 6