
1982ஆம் ஆண்டு, இருப்புப்பாதையின் நெடுகிலும், பெரிய ரக மின் மாற்று நிலையத்தின் பொருத்தல் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது, தொழில் நுட்பம் ரீதியான பணிகளுக்கு அவர் பொறுப்பேற்றார். அக்காலத்தில், அவர் பகலில் வேலை செய்துவிட்டு, இரவில் பொருட்கள் வைக்கப்பட்ட கிடங்கில் தொழில் பயிற்சி நூல்களைப் படித்து, வரைபடங்களைப் பகுத்தாராய்ந்து, மின்மாற்று சாதனங்களைப் பொருத்தும் வழிமுறைகளை ஆராய்ந்தார். 4 திங்களுக்கு பின், அத்திட்டப்பணி தங்கு தடையின்றி சோதிக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. அந்த வெற்றியினால் ஏற்பட்ட மகிழ்ச்சியை Dou Tie Cheng முழுமையாக அனுபவித்தார். அது மட்டுமல்ல, நிறுவனத் தலைவர்கள் மற்றும் சக பணியாளர்களின் பாராட்டையும் அவர் பெற்றார்.
பல ஆண்டுகளாக Dou Tie Cheng வெளியூரில் வேலை செய்து வருகின்றார். வீட்டில், தமது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து செலவிடும் நேரம் அதிகமில்லை. 30 ஆண்டுகளுக்கு முன், அவரும், Yang Hua Fangகை திருமணம் செய்தார். கடந்த 30 ஆண்டுகளில், அவர்கள் இருவரும் சேர்ந்து பழகி இருந்த நேரம் ஒட்டுமொத்தமாக, 3 ஆண்டுகள் மட்டுமே. இருந்த போதிலும், Yang Hua Fang, கணவரின் பணியைப் புரிந்து கொண்டு, ஆதரிக்கின்றார்.
1 2 3 4 5 6
|