
கடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகளின் இறுதியில், கிராமத்தில் மின்னாற்றல் பணியாளர் என்ற நிலையிலிருந்து, ஓர் அரசு தொழில் நிறுவனத்தின் மின்னாற்றல் பணியாளராக அவர் மாறினார். அப்போது, வசதிகள் பின்தங்கியதாக இருந்ததால், சில மின்சார வசதிகளை சரிபார்க்கும் பொருட்டு, மின் கம்பத்தில் ஏற வேண்டியிருந்தது. துவக்கத்தில், அவருக்கு மின்கம்பத்தில் ஏற தெரியாது. மூத்த தொழிலாளர்களிடமிருந்து மின் கம்பத்தில் ஏறும் முறையை கற்றுக்கொண்டு, பயிற்சி செய்தார். ஒரு வாரத்துக்குள், அவரால் மின் கம்பத்தில் ஏற முடிந்தது. மின்னாற்றல் தொழிலாளராக, தொழில் முறை அறிவுகள் மற்றும் அதிக தொழில் நுட்பங்களைக் கல்வியை கற்கவில்லை என்றால், மக்களின் நன்மதிப்பை வென்றெடுக்க முடியாது என்று அவர் படிப்படியாக உணர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:
"மூத்த தொழிலாளர்களுடன் நெருங்கி பழகிய போது, தொழில் நுட்பம் தெரியாத தொழிலாளர்கள் மக்களால் மதிக்கப்படவில்லை என்று உணர்ந்தேன்" என்றார், அவர்.
1 2 3 4 5 6
|