• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-02-18 16:35:26    
பேராசிரியரான தொழிலாளி Dou Tie Cheng

cri

Dou Tie Cheng தனது முதல் மின்மாற்று நிலைய திட்டப்பணிக்கு பின், 37 இருப்புப் பாதைகளின் மின் மாற்று நிலையங்களின் திட்டப்பணிகளுக்கு பொறுப்பேற்றிருக்கின்றார். அத்திட்டப்பணிகள் முழுவதும், "தரமிக்க திட்டப்பணிகளாக" உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர் எழுதிய சுமார் 400 பக்கங்களுடைய "மின் மாற்று நிலையங்களின் பொருத்தும் செய்முறை" என்ற புத்தகம், சீன இருப்புப்பாதை கூட்டு நிறுவனத்தின் முதலாவது பிரிவின் திட்டப்பணி தொழில் நுட்ப வரையறை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டு, பெய்சிங்கிலிருந்து, தென் சீனாவின் கடலோர நகரான Zhu Haiக்கு செல்லும் உயர் வேக நெடுஞ்சாலை கட்டியமைக்கப்பட்டது. இந்நெடுஞ்சாலைக்கு இசைவான இயந்திரம் செய்கின்ற திட்டப்பணிக்கு Dou Tie Chengஉம் இதர தொழிலாளர்களும் பொறுப்பேற்றனர். அதில் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள், வெளிநாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதால், சாதனங்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்து கொண்டே Dou Tie Cheng அவைகளை பொருத்துகின்ற பணியில் ஈடுபட்டு வந்தார். அவர் மிக விரைவாக அப்பணியை நிறைவேற்றினார். ஆனால், மின்சாரம் அனுப்புவதற்கு முந்திய பரிசோதனையில், ஒரு எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டது. சிக்கலை வெகு விரைவில் நீக்கும் பொருட்டு, நுட்பங்களை பொருத்தியிருந்த வரை படத்தின் படி, உதிரி பாகங்கள் மற்றும் நெறிகளில் அவர் முறையான சோதனை நடத்தினார். சில மணி நேரத்துக்கு பின், விசை பொறியில் ஏற்பட்டிருந்த கோளாற்றை அவர் கண்டுபிடித்துவிட்டு, நுட்பங்களை பொருத்திய பணியில் தவறு ஏதுமில்லை என்று கண்டுபிடித்தார். அவர் கூறியதாவது:

"வெளிநாட்டு நிபுணர் வந்த பின், சரிபார்த்த போது கிடைத்த தரவுகள் பற்றி அவரிடம் தெரிவித்தேன். 'நீர் சரியாக பகுத்தாராய்கின்றீர்' என அவர் எனக்கு தெரிவித்தார்" என்றார், Dou Tie Cheng.

1 2 3 4 5 6