 2008ஆம் ஆண்டு சீன-ஜப்பானிய இளைஞரின் நட்புப் பரிமாற்ற ஆண்டு என்ற கட்டுக்கோப்புக்குள்ளான நடவடிக்கைகளில் ஒன்றாக, ஜப்பானிலிருந்து இளம் தூதர்களாக ஆயிரம் இளைஞர்கள் சீனாவுக்கு வந்தனர். கடந்த டிசம்பர் 18ஆம் நாள் முதல் 24ஆம் நாள் வரை, ஜப்பானைச் சேர்ந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர், சீனியர் பள்ளி மாணவர், பல்கலைக்கழக மாணவர், அரசுப் பணியாளர், நிறுவனங்களின் பணியாளர், செய்தியாளர் ஆக ஆயிரம் பேர், நட்புறவுக்கான இளம் தூதர் என்ற முறையில் சீனாவுக்கு வந்து, சீன இளைஞர்களுடன் ஆழமான பரிமாற்றம் செய்து, இருநாட்டுறவின் எதிர்கால வளர்ச்சிக்கு நட்புப் பாலம் ஒன்றை உருவாக்கினர்.
"அனைவருக்கும் வணக்கம். நாங்கள் பிரதிநிதிக் குழுவின் பல்கலைக்கழக மாணவர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள். என் பெயர் Katayama Rei. என் பெயர் Mizuna Yuki. இந்தப் பிரதிநிதிக் குழுவினரில் பெரும்பாலானோர் முதல்முறை சீனாவில் பயணம் மேற்கொள்கின்றனர். மேலதிக சீன நண்பர்களுடன் பழகி, பரிமாற்றம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்."
1 2 3 4 5 6
|