
2008ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீன-ஜப்பானிய இளைஞரின் நட்புப் பரிமாற்ற ஆண்டு என்ற நடவடிக்கை துவங்கிய பின், 115 பல்வகையான பரிமாற்ற நிகழ்ச்சிகளில் இருநாட்டு இளைஞர்கள் விரிவான முறையில் கலந்து கொண்டனர். பண்பாடு, கல்வியியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், செய்தி ஊடகம், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி, சுற்றுப் பயணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் இந்த நிகழ்ச்சிகள் தொடர்புடையவை. 12 ஆயிரத்துக்கு அதிகமானோர் இருதரப்பு பயணப் பரிமாற்றத்தில் கலந்து கொண்டனர். இவையனைத்தும் அருமையான நினைவாக மாறி, இருநாட்டு இளைஞரின் மனதில் ஆழப்பதிந்துள்ளது.
கடந்த டிசம்பர் 20ஆம் நாள், சீன-ஜப்பானிய இளைஞரின் நட்புப் பரிமாற்ற ஆண்டு என்ற நடவடிக்கைக்கான நிறைவு விழா, பெய்ஜிங் விமான மற்றும் விண்வெளி பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் மற்றும் ஜப்பானின் முன்னாள் தலைமை அமைச்சர் Fukuda Yasuo, நிறைவு விழாவில் கலந்து கொண்ட இளைஞர்களுடன் இணைந்து, சீன-ஜப்பானிய அருமையான எதிர்காலத்துக்கான வாழ்த்தைக் குறிக்கும் சிவப்பு நாடாவை சீன-ஜப்பானிய நட்புறவுக்கான விருப்பம் என்ற ஒரு மரத்தில் கட்டினர். சீனா மற்றும் ஜப்பானின் 2000க்கு அதிகமான இளைஞர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தருணதத்தை நேரில் கண்டனர். 1 2 3 4 5 6
|