• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-18 10:38:36    
சீன-ஜப்பானிய உறவின் வளர்ச்சிக்குத் துணை புரியும் ஒரு நிகழ்ச்சி

cri

ஜப்பானிய இளைஞர் நட்புப் பிரதிநிதிக் குழுவின் பல்கலைக்கழக மாணவர் பிரிவைச் சேர்ந்த சிலர் பெய்ஜிங்கிலுள்ள Shi Cha Hai வீதியைச் சென்று பார்த்தனர். இவ்விடம், ஆழ்ந்த பண்பாட்டை உணரக் கூடிய ஒரு பழைய பகுதியாகும். பெய்ஜிங் நாட்டுப்புற கலைஞர் Bai Dacheng தனது வீட்டில், ஜப்பானிய நண்பர்களுக்கு தனிச்சிறப்புடைய தமது தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது—

"Zong Ren என்ற கைப்பாவைக் கலை, பெய்ஜிங் மட்டுமே கொண்ட நாட்டுப்புற கைவினை நுட்பமாகும். அனைத்து Zong Ren என்ற கைப்பாவைகளும் பெய்ஜிங் இசை நாடகத்திலுள்ள நாயகர்களை வெளிப்படுத்துகின்றன. இந்த வகை கைப்பாவை, நடமாட்டத் தன்மை வாய்ந்த ஒரேயொரு நாட்டுப்புற கைவினைப் பொருளாகும். செம்பு தட்டை அடிக்கும் போது, கைப்பாவைகள் இசை நாடக அரங்கேற்றம் போல் நடமாடுகின்றன" என்றார் அவர்.

Osaka பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு மாணவர் Hachiya Makoto சீனாவின் வட கிழக்கு பகுதியிலுள்ள Ha Er Bin நகரில் பிறந்தார். சீன மற்றும் ஜப்பானிய வம்சாவழியை கொண்டவர் அவர். Shi Cha Hai வீதியின் குடியிருப்புச் சேவை மையம், முதியோர் மற்றும் உடல் திறன் சவால் மிக்கவருக்கு வழங்கிய வசதிகளைப் பார்த்த பின், அவர் செய்தியாளரிடம் கூறியதாவது—

"இவ்வளவு பெரிய இடத்தில் முதியோருக்கான சேவை வசதிகள் முழுமையாக உள்ளன என்பதையும் இவ்வளவு பெரிய நூலகத்தையும் கண்டு வியப்பு அடைகின்றேன். முதியோருக்கான பராமரிப்பு உணர்வுப்பூர்வமானது. ஜப்பானியர் ஒருவர் இங்கே வேலை செய்கிறார். சீன மற்றும் ஜப்பானிய வம்சாவழி கொண்ட நான், சீன மற்றும் ஜப்பானிய மொழியில் பேசக் கூடிய திறனைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில் இருநாடுகளுக்கிடையில் பாலம் ஒன்றை உருவாக்கி, என்னால் இயன்ற அளவில் இருநாட்டு நட்புறவுக்கு பங்காற்ற விரும்புகின்றேன்" என்றார் அவர்.

1 2 3 4 5 6