
டிசம்பர் 19ஆம் நாள் பிற்பகல், சீன-ஜப்பானிய இளைஞரின் நட்புப் பரிமாற்ற ஆண்டு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜப்பானிய பிரதிநிதிக் குழுவின் பல்கலைக்கழக மாணவர் பிரிவைச் சேர்ந்த 124 மாணவர்கள், சீன Ren Min பல்கலைக்கழகத்தில் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள மாணவர்களுடன் பரிமாற்றம் செய்தனர். பல்கலைக்கழத்தின் 3ஆம் ஆண்டு மாணவி Katayama Rei மற்றும் 4ஆம் ஆண்டு மாணவி Mizuna Yuki, அவ்வளவு சரளமற்ற சீன மொழியில் இருநாட்டு இளம் பார்வையாளருக்கு கலை நிகழ்ச்சிகளை அறிவித்தனர். பின்னர் அவர்கள் இதர ஜப்பானிய மாணவர்களுடன் இணைந்து, Okinawaவின் பாரம்பரிய நடனத்தை ஆடினர்.
1 2 3 4 5 6
|