• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் ஒட்டுமொத்தக் கட்டுபாடும் மக்களின் வாழ்க்கை மேம்படும்
  2010-03-06 16:36:41  cri எழுத்தின் அளவு:  A A A   

2009ம் ஆண்டு நடுவண் அரசின் ஒட்டுமொத்த பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் தூண்டுதலுடன், சீனப் பொருளாதார அதிகரிப்பு 8.7விழுக்காட்டை எட்டியது. இது, அரசு அதே ஆண்டின் துவக்கத்தில் வகுத்த இலக்கை விட அதிகம். அதேவேளை, மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்து, மேம்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சி தெளிவான சாதனைகளைப் பெற்றது. அவை, மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. பெய்ஜிங்கில் நடைபெற்று வருகின்ற 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடரில், நிதி நெருக்கடியிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகின்ற சீனா 2010ம் ஆண்டு மக்களின் வாழ்க்கை மேம்பாட்டில் மேலதிக கவனம் செலுத்து்ம் என்ற தகவல் வெளிப்படுத்தப்பட்டது.

கடந்த ஆண்டில் சீனா பெற்ற சாதனைகள் குறித்து, சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் சாங் பிங் பேசிய போது

கடந்த ஆண்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பெறப்பட்ட சாதனைகள் மிகத் தெளிவாக உள்ளன. அதேஆண்டு, மக்களுக்கு மிக அதிக நலன் தந்த ஆண்டு ஆகும். நகரங்களில் புதிதாக வேலைவாய்ப்புப் பெற்றோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 10லட்சத்து20ஆயிரம். முதுமைக் கால காப்புறுதி, அத்தியாவசிய மருத்துவக் காப்புறுதி உள்ளிட்ட சமூகக் காப்புறுதி அமைப்புமுறை மேலும் முழுமைப்படுத்தப்பட்டது. தவிர, கல்வி நியாயத் தன்மையை முன்னேற்றுவதிலும் அதிக முன்னேற்றம் பெறப்பட்டது என்று சாங் பிங் கூறினார்.

மக்களின் வாழ்க்கை மேம்பாடு, சீனப் பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை நோக்கமாகும். மக்களின் வாழக்கையை உத்தரவாதம் செய்ய சீன அரசு 2010ம் ஆண்டில் மேலும் முயற்சிக்கும். மார்ச் 5ம் நாள் அரசுப் பணியறிக்கையை வழங்கியபோது சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் இதைச் சுட்டிக்காட்டினார். மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய துறைகளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க, நடுவண் நிதி 2010ம் ஆண்டு மேலும் பயன்படுத்தப்படும் என்று சீன நிதி அமைச்சர் ஷிய்சூரென் 6ம் நாள் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

வேளாண்மை அடிப்படை வசதிகள், கிராமப்புற மக்களுக்கான வாழ்க்கை திட்டப்பணிகள், கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட சமூக இலட்சியத்தின் வளர்ச்சியை ஆதரிக்க, நடுவண் அரசின் பொது ஒதுக்கீட்டுத்தொகை இவ்வாண்டு 99,270கோடி யுவானை எட்டும். இதன் மூலம், பொதுச் சேவைத் துறைக்கான ஒதுக்கீட்டை அதிகரித்து, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, சமூக இலட்சிய வளர்ச்சியை அரசு விரைவுப்படுத்தும் என்று ஷிய்சூரென் கூறினார்.

1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040