• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மக்களின் வாழ்க்கை மேம்பாடு மீதான கவனம்
  2010-03-11 18:27:59  cri எழுத்தின் அளவு:  A A A   

பொது மக்களின் வாழ்க்கை பற்றிய பிரச்சினை, இவ்வாண்டின் இரு கூட்டத்தொடர்களில் குவி மையப் பிரச்சினையாகும். வருமானத்தின் பங்கீடு, ஏழைப் பணக்கார இடைவெளி, மருத்துவ சிகிச்சை, வீட்டு விலைவாசி, வேலை வாய்ப்பு வழங்குதல், கல்வி உள்ளிட்ட பொது மக்களின் அடிப்படை வாழ்க்கையுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் விரிவாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சீன அரசுத் தலைவர் ஹூச்சிந்தாவ் தியென் ஜின் பிரதிநிதிக்குழுவின் விவாதக்கூட்டத்தில் கலந்து கொண்டார்

இப்பிரச்சினை பற்றி சீன அரசுத் தலைவர் ஹூச்சிந்தாவ் அண்மையில் தியென் ஜின் பிரதிநிதிக்குழுவின் விவாதக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது கூறியதாவது:
"பொருளாதார வளர்ச்சி முறையின் மாற்றத்தை விரைவுபடுத்தும் நிலையை மேலும் வலுப்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேலும் உயர் நிலைக்கு முன்னேற்ற வேண்டும்" என்றார் ஹூச்சிந்தாவ்.
புதிய நிலைமையில், பொது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சி முறையின் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்குமிடையிலான தொடர்பை சமாளிப்பதற்கு இந்த கோரிக்கை முக்கிய வழிகாட்டல் முக்கியத்துவம் வாய்ந்தது.

சீன நவீன சர்வதேச உறவு ஆய்வகத்தின் உலகப் பொருளாதார ஆய்வு நிலையத்தின் தலைவர் Chen Feng Ying அம்மையார் கூறியதாவது:
"பொது மக்களின் வாழ்க்கையில் கவனம் செலுத்துவது, அவர்கள் மேலதிக வருமானம் பெற்று நுகர்வு அனுபவிப்பதில் கவனம் செலுத்துவதாகும். நுகர்வு, பொருளாதார அதிகரிப்புக்கு பெரும் பங்காற்றும்" என்றார், அவர்.

1 2
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040