![]( /mmsource/images/2011/04/14/620520f27eb74c15af807cc99b08a04b.jpg)
தென் சீனாவில் அமைந்துள்ள பூஃசியன் மாநிலத்தில் நடைமுறையிலுள்ள வானொலித் திட்டப்பணி, கிராமப்புற ஒலி மற்றும் ஒளி பரப்பு திட்டப்பணி, தைவான் நீரிணையின் மேற்குக் கரையிலுள்ள பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் சீன வானொலி, தொலைக்காட்சி ஊடக மற்றும் திரைப்பட ஆணையத்தின் ஏற்பாட்டில் வானொலி மற்றும் தொலைக்காட்சி முன்னணியில் பணிபுரிகின்ற 30க்கும் அதிகமான அறிவிப்பாளர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் ஏப்ரல் 12ம் நாள் பூஃசியன் மாநிலத்தின் தலைநகர் பூஃச்சோவில் பணிப் பயணம் மேற்கொள்ளத் துவங்கினர்.
அவர்கள் அன்று காலை பூஃசோ தொலைக்காட்சி நிலையத்தின் கட்டிடத்தில் பூஃசியன் மாநிலத்தின் சகபணியாளர்களுடன் உரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அறிவிப்பாளர்களை உருவாக்குவது, நிகழ்ச்சி நிகழும் இடங்களிலிருந்தே செய்திகளை அறிவிக்கும் தொழில் நுட்பம், தலைசிறந்த நிகழ்ச்சிகளை உருவாக்கும் வழிமுறை ஆகியவை பற்றி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட வானொலி சகபணியளர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
1 2