பிற்பகல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பூஃசியன் மாநிலக் குழுவின் செயலாளர் sun chun lan அம்மையார் அறிவிப்பாளர்களைச் சந்தித்துரையாடினார். பூஃசியன் மாநிலத்தின் வரலாறு, அதன் நீண்டகால பண்பாடு, நவசீனாவின் விடுதலைக்கான போராட்டத்துக்குத் தியாகம் செய்த பூஃசியன் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள், தைவான் நீரிணைப் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அனுபவங்களை பற்றி செயலாளர் sun chun lan அம்மையார் அறிவிப்பாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
பூஃசியன் மாநில வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களின் அனுபவங்களை அறிந்து கொள்ளும் இப்பணி பயணத்தில் தி.கலையரசி உள்பட சீன வானொலியின் 8 அறிவிப்பாளர்கள் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.