தொடர்ந்து, நேயர்களுக்கு தம் கருத்துக்களை நேர்மையான முறையில் தெரிவிக்க முழுவாய்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு நேயர்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்தி தம் கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக, விழுப்புரம் ஜமீல் அகமது, திருநீலக்குடி மா.உலகநாதன், ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன், திருச்சி வி.டி.இரவிச்சந்திரன் போன்ற நேயர்களின் கருத்துக்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டன. தமது உரையினூடே, தாம் எழுதிக் கொண்டு வரும், நீளக் கடிதத்தின் ஒரு பகுதியான 8 மீட்டர் கடிதத்தை வி.டி.இரவிச்சந்திரன் நேயர்களிடையே காண்பித்தார்.
இறுதியாக, திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன் நன்றியுரை நிகழ்த்த, அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 23வது கருத்தரங்கு இனிதே நிறைவுற்றது. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், எவ்வித எதிர்பார்ப்புமின்றி கலந்து கொண்ட நேயர்களுக்கும், கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்திய எஸ்.செல்வம், என். பாலக்குமார், எஸ்.பாண்டியராஜன், ஜி.ராஜகோபால், வி.டி.இரவிச்சந்திரன் மற்றும் தலைமை மன்றப் பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.